உள்ளூர் செய்திகள்

பாலக்கோட்டில் உள்ள பால்வண்ணநாதர் கோவிலில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

ஐப்பசி மாத பவுர்ணமியொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

Published On 2023-10-29 15:42 IST   |   Update On 2023-10-29 15:42:00 IST
  • திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
  • சாமிக்கு அன்னத்தால் அலங்கார சேவை நடைபெற்றது.

தருமபுரி, அக்.29-

ஐப்பசி மாத பவுர்ண மியையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து சிவன் கோவில்க ளிலும் அன்னா பிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 தருமபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று அன்னாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை யொட்டி அந்தந்த கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு அன்னாபி ஷேகம் நடைபெற்றது.

பின்னர் சாமிக்கு மகா தீபாராதனையும், உபகார பூஜைகளும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அன்னா–பிஷேகம் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. புகழ்பெற்ற தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் புலனாகிய மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை யொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அன்னத்தால் அலங்கார சேவை நடைபெற்றது.

தருமபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனா கிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அன்னாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை யொட்டி சாமிக்கு பல்வேறு வகையான பழங்கள், வாசனை திரவி யங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

பின்னர் 30 கிலோ எடை கொண்ட அரிசியை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவைக் கொண்டு சாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

 இதேபோல் தருமபுரி கடை–வீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவா ணேஸ்வரர் கோவில், தருமபுரி குமார சாமிப்பேட்டை சிவகாம சுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவில், தருமபுரி ஆத்துமேடு சர்வாங்க சுந்தரி அம்பாள் உடனாகிய ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவில், தருமபுரி அடுத்த கடகத்தூர் சோழவராயன் ஏரி அருகே உள்ள வில்வ நாயகி அம்மை உடன் அமர்ந்து விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னம் மற்றும் பல்வேறு வகையான பலகாரங்களைக் கொண்டு சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது.

தருமபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் உடனாகிய அருளீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னா பிஷேக விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி ணசனம் செய்தனர்.

இதேபோல் தருமபுரி அடுத்த சவுளுப்பட்டியில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அன்னா பிஷேகம் நடைபெற்றது. பாலக்கோட்டில் பிரசித்தி பெற்ற பால்வண்ணநாதர் கோவிலில் சிறப்பு அன்னா–பிஷேகம் நடைபெற்றது.

இதேபோல் காரிமங்கலம் மலையில் உள்ள அரு ணேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையில் உள்ள காவேரி அம்மாள் உடனா கிய சோமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்க ளிலும் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அண்ணா அபி ஷேக விழா நடைபெற்றது.

இதில் சுற்று வட்டா–ரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னா பிஷேக விழாவில் ஏராள மான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி பழைய பேட்டை ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில்ஐப்பசி மாதத்தில் பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடை பெற்றது அன்னாபிஷேக தரிசனத்தில் சுவாமி சிறப்பு அலங்கா ரத்தில் அருள்பா லித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.

இதேேபால கிருஷ்ணகிரி மலையடி வாரத்தில் அமைந்து ள்ள கவிஸ்வர கோவிலில் ஐப்பசி மாதத்தில் பௌர்ண மியை முன்னிட்டு அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அடுத்த கள்ளுக்குறுக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் அமைந்துள்ள ஸ்ரீ கால பைரவர் கோவிலில் ஐப்பசி பவுர்ண மியை முன்னிட்டு அன்னா பிஷேகம் நடை பெற்றது . இதில் பைரவர் லிங்கத்தில் சாமி சிறப்பு அலங்கா ரத்தில் அருள்பா லித்தார். ஏராளமானோர் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதமும் வழங்கப்பட்டது.

 ஓசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில், நெசவுத்தெ ருவில் உள்ள சோமேஸ்வரர் கோவில், கும்பாரத்தெருவில் உள்ள கும்பேஸ்வரர் கோவில், காமராஜ் காலனியில் உள்ள காசிவிசு வநாதர் ஆலயம், நஞ்சுண்டே ஸ்வர் கோவில், பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னா பிஷேகம் நடைபெற்றது.

அன்னாபிஷேக தரிசனம் கண்டால், பல கோடி லிங்கங்களை ஒரே நேரத்தில் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும் என்று பெரியவர்கள் கூறுவர். இந்த கோவில்களில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தி, சாமி தரிசனம் செய்தனர்.

Similar News