உள்ளூர் செய்திகள்

கொடிமரத்திற்கு தீபாராதனை நடந்த போது எடுத்த படம்.

ஆறுமுகநேரியில் சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா கொடியேற்றம்

Published On 2023-06-16 14:14 IST   |   Update On 2023-06-16 14:14:00 IST
  • அதிகாலையில் கும்ப பூஜையை தொடர்ந்து கொடிப்பட்ட ஊர்வலம் நடந்தது.
  • இன்று மாலை திருநாவுக்கரசர் சுவாமி களின் உழவாரப்பணி உலா நடக்கிறது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடிப்பட்ட ஊர்வலம்

முன்னதாக நேற்று காலையில் கணபதி ஹோமம் மாலையில் நால்வர் சுவாமிகளின் புறப் பாடு, தேவார திருமுறை பாரா யணம், காப்பு கட்டு தல் ஆகியவை நடந்தன. இன்று அதிகாலையில் கும்ப பூஜையை தொடர்ந்து கொடிப்பட்ட ஊர்வலம் நடந்தது. பின்னர் கொடியேற்றம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தன. பூஜை வைப வங்களை அய்யப்ப பட்டர் குழுவினர் செய்திருந்தனர்.

கோவில் மணியம் சுப்பையா, தொழிலதிபர்கள் தவமணி, பூபால் ராஜன், செல்வ பெருமாள், நடராஜன், பேராசிரியர் அசோக்குமார், தெரிசை அய்யப்பன், அமிர்தராஜ், தங்கமணி, கற்பக விநாயகம், இளையபெருமாள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுவாமி வீதிஉலா

இன்று மாலை திருநாவு க்கரசர் சுவாமி களின் உழவார ப்பணி உலா நடக்கி றது. தொடர்ந்து யாகசா லை பூஜை நடக்கிறது. பின்னர் இரவில் ஸ்ரீபெலிநாயகர் அஸ்திர தேவரு டன் ரிஷப வாக னத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

விழா நாட்களில் தினசரி காலையும், மாலையும் சப்பரபவனி, பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நிறைவாக 25-ந் தேதி 10-வது நாள் திருவிழா அன்று மாலையில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது.

Tags:    

Similar News