கைதான பிரீத்தா.
குடும்ப தகராறில் ஆத்திரம்: தச்சு தொழிலாளி மண்டையை உடைத்த மனைவி அதிரடி கைது
- அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- கணவன் மண்டையை உடைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள ஜிஞ்சம் பட்டி, குழந்தைவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரீத்தா (வயது25), இவரது கணவர் ஈஸ்வரன் பெங்களூரில் தச்சு வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்த ஈஸ்வரன், மனைவி பிரீத்தா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாடகை வீடு எடுத்து வசித்தனர்.அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் பிரீத்தாவின் தாய் கவிதா வீட்டில் உறவினர் செல்வம் என்பவர் சில ஆண்டுகளாக வசித்து வந்தார்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், செல்வம் மற்றும் பிரீத்தா, பிரீத்தாவின் அண்ணன் பிரவீன்குமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஈஸ்வரனை கட்டையால் அடித்து மண்டையை உடைத்தனர்.
அப்போது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பலத்த காயமடைந்த ஈஸ்வரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சேர்த்தனர். மேல்சிகிச்சைகாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து மத்தூர் காவல் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகன் தச்சு தொழிலாளியை தாக்கிய செல்வம், பிரீத்தா, பிரவீன்குமார் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.
இதில் பிரீத்தவை கைது செய்து ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாகி உள்ள உறவினர் செல்வம், பிரிவின்குமார் ஆகிய இருவரையும் மத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.