அங்காளநாச்சியம்மன் கோவில் மண்டல பூஜை
- அங்காள நாச்சியம்மன் ஆலயத்தில் இரண்டாம் காலவேள்வி பூஜை நடந்தது.
- மண்டல பூஜையான நேற்று காலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில், ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சிந்தகம்பள்ளி கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரபெருமாள், ஸ்ரீ சித்தி விநாயக சுவாமி, அருள்மிகு அங்காளநாச்சியம்மன் திருக்கோயி மகா கும்பாபிஷேக விழா கடந்த 8ம்தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ரக்ஷாபந்தனம், திஹாரோஹனம், அங்குரார்பனம் முதல் கால வேள்வி பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை அங்காள நாச்சியம்மள் கோபுரத்தில் தான்யம் நிரப்புதல், கோபுர கலசத்தாபனம், சுவாமிவிக்ஹங்கள் பிரதிஷ்டை, கலசஸ்தாபனம் நடந்தது. 9ம் தேதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் யாகபூஜை மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் மகா சுதர்ஷண ஹோமம், தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியுடன் அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து அன்று மாலை அங்காள நாச்சியம்மன் ஆலயத்தில் இரண்டாம் காலவேள்வி பூஜை நடந்தது. 10ம் தேதி அங்காள நாச்சியம்மன் மகா கும்பாபிஷேகம், மஹாமங்களார்த்தி, விஷ்வரூபதரிசனம், ராஜாதரிசனம், கோ பூஜை, அன்னதானம் நடைபெற்றது. அன்று முதல் நேற்று வரை தொடர்ந்து மண்ட பூஜைகள் நடந்தது.
மண்டல பூஜையான நேற்று காலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில், ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது-. அதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களை சேர்ந்த பெண்களும் மா விளக்கை ஊர்வலமாக எடுத்து கொண்டு, முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை தலைமையில் பம்பை இசை முழங்க ஊர்வலமாக அங்காள நாச்சியம்மன் கோயிலுக்கு சென்று, படையலிட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மெகா அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.