உள்ளூர் செய்திகள்
வனவிலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகம்
- விலங்குகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நாடகம் தொட்ட பூவத்தியில் நடைபெற்றது.
- காடுகளை பாதுகாப்பதால் உள்ள நன்மைகள், வன விலங்குகளால் உள்ள நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறினார்கள்.
குருபரப்பள்ளி,
ஓசூர் வனக்கோட்டம் ராயக்கோட்டை வனச்சரகம் சார்பில் காடுகளை பாதுகாப்போம், வன விலங்குகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நாடகம் தொட்ட பூவத்தியில் நடைபெற்றது.
இதில் புதுகுரல் கலைக்குழுவை சேர்ந்தவர்கள் நாடகம் நடத்தி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்கள்.
காடுகளை பாதுகாப்பதால் உள்ள நன்மைகள், வன விலங்குகளால் உள்ள நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறினார்கள். இதில் ராயக்கோட்டை வனச்சரக அலுவலர் வெங்கடாசலம், வனவர்கள் சரவணன், செந்தில்நாதன், வன காப்பாளர் புட்டுகான், வன குழு தலைவர் சென்னப்பன், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கோவிந்தன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன், முன்னாள் ஊராட்சிக்குழு தலைவர் மனோகரன், மாரப்பன், கோவிந்தராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.