உள்ளூர் செய்திகள்

மீன் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட வலையில் சிக்கிய 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு.

முக்கூடல் அருகே 8 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

Published On 2023-02-18 09:35 GMT   |   Update On 2023-02-18 09:35 GMT
  • முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக மலைப்பாம்புகள் பிடிபட்டு வருவது அதிகமாகி வருகிறது.
  • மீன் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட வலையில் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியது.

முக்கூடல்:

முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக மலைப்பாம்புகள் பிடிபட்டு வருவது அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் இன்று பாப்பாக்குடி அருகிலுள்ள செங்குளம் வாய்க்கால் பகுதியில் இடைகாலை சேர்ந்த சுடலைமணி என்பவர் மீன் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட வலையில் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியது. வலையில் மீனுக்கு பதிலாக மலைப்பாம்பு சிக்கியதை பார்த்தவர்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையில் இருந்து வந்த வேட்டை தடுப்பு காவலர் முருகனிடம் ஒப்படைத்தனர்.

இந்தப் பகுதிகளில் பாம்பு, கரடி, மான், மிளா, காட்டுப்பன்றிகள் அடிக்கடி வருவதால் காட்டுப்பகுதிக்குள்ளும், ஆற்றில் குளிக்க செல்பவர்களும், குளங்களுக்கு செல்பவர்களும் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக இரவு நேரங்களில் இப்பேற்பட்ட இடங்களில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News