உள்ளூர் செய்திகள்
ஊட்டி மாரியம்மன் கோவிலில் அம்மன் வீதி உலா
- ஆடிப்பெருக்கன்று மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் வனக்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
ஊட்டி மாரியமமன் கோவிலில் சிறப்பு பூஜைகள், ஆடிமாத முதல் நாளான கடந்த ஜுலை 17-ந் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து ஆடிப்பெருக்கு நாளான நேற்று காலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
தொடர்ந்து மாரியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா நடந்தது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருத்தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வனக்குமார் தலைமையிலான போலீசார் திருத்தேர் வலம் வரும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.