உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி டோல்கேட்டில் சட்டமன்ற உறுதி மொழி குழுவினர் ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

விக்கிரவாண்டி டோல்கேட்டில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தனிவழி விடவேண்டும்

Published On 2023-08-26 07:28 GMT   |   Update On 2023-08-26 07:28 GMT
  • இந்த டோல்கேட் எத்தனை ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது.
  • டோல்கேட்டில் சட்டமன்ற அரசு உறுதி மொழிக்குழு பரிந்துரையை ஏற்று இதனை நடைமுறை படுத்துகின்றனர்.

விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவை அரசு உறுதி மொழி குழு பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். வீடூர் அணையை பார்வையிட சென்ற குழு வழியில் விக்கிரவாண்டி டோல் கேட்டை கடந்த போது அங்கு குழுவின் தலைவர் வேல்முருகன், டோல்கேட் அதிகாரிகளுடன் நடை முறைகள் குறித்து வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் அதிகாரிகளிடம் கூறியதாவது: 

விக்கிரவாண்டி டோல்கேட்டில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ், கவர்னர், அரசு அதிகாரிகள், அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் மட்டும் செல்ல தனியாக ஒரு வழி ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள 54 டோல்கேட்டுகளில் 25-க்கும் மேற்பட்ட டோல்கேட்டில் சட்டமன்ற அரசு உறுதி மொழிக்குழு பரிந்துரையை ஏற்று இதனை நடைமுறை படுத்துகின்றனர்.

ஆனால் விக்கிரவாண்டி டோல்கேட்டில் நடைமுறை படுத்துவது இல்லை. இந்த டோல்கேட் எத்தனை ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துள்ளனரா என்றும், இது வரை டோல்கேட் மூலம் எத்தனை மரக்கன்று கள் நட்டுள்ளனர் போன்ற விபரங்கள் வெளி யிட வேண்டும். இதனை பின்பற்றாத டோல்கேட்டு கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு இக்குழு பரிந்துரை செய்ய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது சட்டப்பேரவை செய லாளர் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் பழனி, கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், கோட்டாட்சியர், பிரவீனாகுமாரி, குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News