உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் சாமி-அம்பாள் அருள்பாலிப்பு.

அமர்நீதி நாயனார் குருபூஜை

Published On 2022-07-05 15:08 IST   |   Update On 2022-07-05 15:08:00 IST
  • இக்கோவிலில் நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை சுயம்பு லிங்கம் நிறம் மாறும்.
  • இக்கோவிலில் அமைந்துள்ள 36 திருப்படிகளில், அபிஷேகம் அலங்காரம் விளக்கேற்றி திருமுறை ஓதி, திருபடிபூஜைகள் நடைபெற்றது.

பாபநாசம்:

பாபநாசம் அருகே நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் அமர்நீதி நாயனார் குருபூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோவில் கயிலாயத்திற்கு இணையான தலம் ஆகும். நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை நிறம் மாறும் சுயம்பு லிங்கம். அகஸ்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி கொடுத்த தலம். திருநாவுக்கரசருக்கு திருவடி தீட்சை அருளிய தலம். குந்திதேவி சாப விமோசனம் பெற்ற தலம். அமர்நீதி நாயனாருக்கு முக்தி கொடுத்த தலம். திருமண பரிகார தலம். இக்கோவிலில் அஷ்டபுஜ காளியம்மன் சிறப்புடையது. இந்த திருநல்லூர் மாட கோயிலில் அமைந்துள்ள 36 திருப்படிகளில், அபிஷேகம் அலங்காரம் விளக்கேற்றி திருமுறை ஓதி, திருபடிபூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் துலாபாரம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அமர்நீதி நாயனார் குருபூஜை நிகழ்ச்சியில் திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் திருச்சிற்றம்பலம் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் குணசேகரன், ரமேஷ் குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து வழிபட்டனர்.

Tags:    

Similar News