உள்ளூர் செய்திகள்

தமிழகம் முழுவதும்1021 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நாளை தேர்வு

Published On 2023-04-24 09:48 GMT   |   Update On 2023-04-24 09:48 GMT
  • அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலி பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
  • 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்.ஆர்.பி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி வெளியிட்டது.

சேலம்:

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 மருத்துவர் பணியிடங்க ளைத் நிரப்புவதற்கான தேர்வு நாளை நடைபெறுகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலி பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்.ஆர்.பி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி வெளியிட்டது.

அதற்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கி கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதியுடன் நிறை வடைந்தது. எம்.பி.பி.எஸ். நிறைவு செய்த 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

இந்த தேர்வை கணினி வழியே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், 1,021 உதவி மருத்துவர் பணியி டங்களை நிரப்புவதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் நாளை (25-ந் தேதி) நடை பெறவுள்ளதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News