உள்ளூர் செய்திகள்

தஞ்சை அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. ஆய்வு செய்தார்.

தஞ்சையில் விரைவில் விமான சேவை தொடங்கப்படும்- எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.

Published On 2022-11-14 10:23 GMT   |   Update On 2022-11-14 10:23 GMT
  • அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.
  • தஞ்சை பெரிய கோவில் முகப்பு பகுதிகளை அழகுப்படுத்த வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 1 கோடியே 22 லட்சம் செலவில் கடந்த 2010-11-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யபட்டு 2013-ம் ஆண்டுபேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

தற்போதுதஞ்சை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.

அதை சீரமைத்து அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்படுவது குறித்து எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் அரங்கத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

பின்னர் நிருபர்களுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், சீரமைக்க நிதி எவ்வளவு குறித்து ஆலோசனை நடத்தபட்டது. உடனடியாக சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும்.

அதேபோல், தஞ்சையில் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணியிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

அப்போது, தஞ்சை விமான படை தளத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு இடமா ற்றம் செய்வது குறித்து பிரச்சினை இருந்தது. தற்போது இதுகுறித்து, தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்தி ராவிடம் ஆலோசனை நடத்தினோம்.

அவர் நில மாற்றம் குறித்து இரண்டு அமைச்சகமும், ஏற்றுக்கொண்டால் விரைவில் தீர்க்கப்பட்டு விமான சேவை தொடங்கப்படும் என்றார்.

மேலும், தஞ்சை பெரிய கோவில் முகப்பு பகுதிகளை அழகுப்படுத்தவும், கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியா ளர் கார்த்திகேயன், மண்டல குழுத்தலைவர் நீலகண்டன், மாநகர நல அலுவலர் (பொ) அசோகன் ஆகியோர் உடன் உள்ளனர்.

Tags:    

Similar News