உள்ளூர் செய்திகள்

வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்ட காட்சி.

விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கல்

Published On 2023-01-17 14:34 IST   |   Update On 2023-01-17 14:34:00 IST
  • பொம்மியம்பட்டி ஊராட்சி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் ஆடு, மாடுகளை வளர்த்தும் விவசாய நிலங்களை மேம்படுத்தவும் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
  • சிகரம் நண்பர் குழு பவுண்டேஷன் சார்பாக சிறப்பாக விவசாயம் செய்து வந்த 5 விவசாயிகளுக்கு அரிவாள்,மண்வெட்டி, பால் கேன், களை வெட்டி உபகரணங்களை வழங்கினர்.

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த பொம்மியம்பட்டி ஊராட்சி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் ஆடு, மாடுகளை வளர்த்தும் விவசாய நிலங்களை மேம்படுத்தவும் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிகரம் நண்பர் குழு பவுண்டேஷன் சார்பாக சிறப்பாக விவசாயம் செய்து வந்த 5 விவசாயிகளுக்கு அரிவாள்,மண்வெட்டி, பால் கேன், களை வெட்டி உபகரணங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிகரம் நண்பர் குழு செயலாளர் சிவகுமார் செய்திருந்தார். இதில் தலைமை ஆசிரியர் சக்தி சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News