உள்ளூர் செய்திகள்

வேளாண்மை உழவர் நலத்துறை பயிற்சி வகுப்பு நடைபெற்ற போது எடுத்தபடம்.

வேளாண்மை உழவர் நலத்துறை பயிற்சி வகுப்பு

Published On 2023-06-03 09:04 GMT   |   Update On 2023-06-03 09:04 GMT
  • வேளாண் அடுக்கு திட்டம் தொடர்பாக வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் எடுத்து கூறினார்.
  • மேலநீலிதநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஞான தீபா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து பேசினார்.

சங்கரன்கோவில்:

மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுரையின்படி, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலமாக வேளாண் பொறியியல் துறை சார்பில் பண்ணை எந்திரமயமாக்கல் மற்றும் புதிய எந்திரங்களை பிரபலப்படுத்துதல் பற்றி விவசாயிகள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் தலைமை தாங்கி விவசாயிகளிடையே உரையாற்றினார். வேளாண் அடுக்கு திட்டம் தொடர்பாக விவசாயிகளிடையே எடுத்து கூறினார். கிராம நிர்வாக அலுவலர் தங்களுடைய ஆவணங்களை கொடுத்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்து 13 துறை திட்டங்களின் பயன்களைப் பெற பயனுள்ளதாக இருக்கும் என்றும், வேளாண் உழவர் நலத்துறை சம்பந்தமான திட்டங்கள் பற்றியும், பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் பற்றியும் எடுத்துக்கூறினார். மேலநீலிதநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஞான தீபா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். வேளாண் பொறியாளர் திருப்பதி பேசுகையில், மானிய விலையில் சோலார் பம்ப்செட் அமைப்பது மற்றும் டிராக்டர் மானிய விலையில் பெறுவது, பண்ணை குட்டை அமைப்பது மற்றும் பல புதிய பண்ணை எந்திரங்களை மானிய விலையில் பெற முடியும் என்பதை பற்றி விவசாயிகளிடையே தெளிவாக எடுத்துக் கூறினார். வேளாண்மை அலுவலர் மகேஷ் திட்டங்கள் மானிய விவரங்கள் பற்றி பேசினார். பயிற்சியில் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் திருமலை குமார் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தன், பயிர் அறுவடை பரிசோதகர் மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News