உள்ளூர் செய்திகள்

விவசாய இடுபொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை

Published On 2023-02-18 14:59 IST   |   Update On 2023-02-18 14:59:00 IST
  • தனியார் உரக்கடைகளில் விளை நிலத்தில் பயிரிடுவதற்கு தேவையான விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம், யூரியா, உயிர் நுண்ணுட்டசத்து இடுபொருட்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்கின்றனர்.
  • இந்த நிலையில், தனியார் உரக்கடை உரிமையாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு இடுபொருட்களை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான கிராமப்புற மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருகின்றனர்.

இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், வாழப்பாடி, பேளூர், புத்திரகவுண்டன்பாளையம், தும்பல், கருமந்துறை பகுதியில் இயங்கும் தனியார் உரக்கடைகளில் விளை நிலத்தில் பயிரிடுவதற்கு தேவையான விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம், யூரியா, உயிர் நுண்ணுட்டசத்து இடுபொ ருட்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்கின்றனர்.

இந்த நிலையில், தனியார் உரக்கடை உரிமையாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு இடுபொருட்களை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. மேலும் வாங்கும் பொருட்களுக்கு உரிய ரசீது வழங்கப்படுவது இல்லை. எனவே இது குறித்து அதிகாரிகள் உரிய

நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து சேலம் மாவட்ட பா.ம.க உழவர் பேரியக்க செயலாளர் ரா.முருகன் கூறியதாவது:

விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் இழப்பை சந்தித்து வரும் நிலையில், வாழப்பாடி பேளூர், புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் தனியார் உரக்கடைகளில், விதை, பூச்சிக்கொல்லி, இடுபொருட்களுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் விவசாயிகளிடம் கூடுதல் தொகை வசூலிக்கும் தனியார் உரக்கடைகளை, வட்டார வேளாண் உழவர்நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் நியாயமான விலைக்கு விவசாய இடு பொருட்களை விற்பனை செய்யவும், போலி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும், விவசாயிகளிடம் தொகைக்கு உரிய ரசீது வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் மெத்தனம் காட்டினால், விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News