உள்ளூர் செய்திகள்

ஜெகதாப் கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடியில் வயல் நீர் குழாயின் பயன்பாடு பற்றிய செயல் முறை விளக்கம் மாணவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

வேளாண் கல்லூரி மாணவர்களின் நெல்லில் வயல் நீர் குழாய் பற்றிய செயல்முறை விளக்கம்

Published On 2022-12-29 09:41 GMT   |   Update On 2022-12-29 09:41 GMT
  • வயலின் வரப்புகளில் இருந்து நிலத்தில் 1-மீட்டர் உட்புறம் வைக்கவேண்டும்.
  • இந்த குழாயை பயிரை நடவு செய்த 10-வது நாள் வைக்க வேண்டும்.

காவேரிப்பட்டணம்,

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். வாழவச்சனூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் இறுதியாண்டு மணவர்கள் 11 பேர் கொண்ட குழு பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று காவேரிப்பட்டிணம் வட்டாரத்தில் உள்ள ஜெகதாப் கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடியில் வயல் நீர் குழாயின் பயன்பாடு பற்றிய செயல் முறை விளக்கம் மாணவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த வயல் நீர் குழாயானது 30 செ.மீ நீளம் 15 செ.மீ அகலம் கொண்டது. இதனை வயலின் வரப்புகளில் இருந்து நிலத்தில் 1-மீட்டர் உட்புறம் வைக்கவேண்டும்.

இந்த குழாயை பயிரை நடவு செய்த 10-வது நாள் வைக்க வேண்டும். இந்த முறையால் ஏக்கருக்கு 15 லட்சம் லிட்டர் நீர் சேமிக்கப்படு கிறது (30 சதவீதம்). மேலும் இம்முறையில் 10 முதல் 20 சதவீதம் வரை மகசூல் அதி கரிக்கிறது.

இந்த குழாயைப் பயன்படுத்தி நீர் பாய்ச்சு ம்போது பூ பூக்கும் வரை 2.5 செ.மீ உயரம் வரையிலும் அதன் பிறகு 5 செ.மீ உயரத்திலும் நீரை விட வேண்டும்.

அடுத்த முறை நீர் பாய்ச்சும் போது நீரின் அளவு 15 செ.மீ ஆழம் சென்ற பிறகு மயிரிழை அளவு விரிசல் ஏற்ப டும் போது பாய்ச்ச வேண்டும். இதனால் நீரினை அதிக அளவில் வீணாக்காமல் மற்ற காய்கறிகளில் பயன்படு த்தலாம் என மாணவர்கள் விளக்க மாக எடுத்து ரைத்தனர்.

Tags:    

Similar News