உள்ளூர் செய்திகள்

தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. தீர்த்தராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அக்னிபாத் திட்டத்தை கண்டித்து தருமபுரி-கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-28 08:55 GMT   |   Update On 2022-06-28 08:55 GMT
  • கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.
  • பல்வேறு இடங்களில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

அக்னிபாத் திட்டத்தை கண்டித்து கிருஷ்ணகிரி, பர்கூர், ஓசூர், தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசின் அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். நகர தலைவர் லலித்ஆண்டனி வரவேற்றார்.

இதில், கிருஷ்ணகிரி டாக்டர்.செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், அக.கிருஷ்ணமூர்த்தி, நாராயணமூர்த்தி, நாஞ்சில் ஜேசுதுரை, ஊத்தங்கரை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், முன்னாள் நகர தலைவர் முபாரக் உள்ளிட்ட ஏராளமனோர் பங்கேற்று, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பர்கூர்

இதே போல் பர்கூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். இதில் செல்லக்குமார் எம்பி., பங்கேற்று கண்டனவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர்கள் சேகர், ஜெயபிரகாஷ், விவேகானந்தன், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். மாநில செயலாளர் தேன். கு. அன்வர், மாவட்ட துணை தலைவர் ஷபியுல்லா, முன்னாள் நகர் தலைவர் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் பால்ராஜ் வரவேற்புரை ஆற்றினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ,கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டு மேலும் ஜெயக்குமார், வெங்கடேஷ், முனியப்பா, ரஞ்சித், அசோக் குமார் ,சாதிக் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அக்னி பத் திட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முடிவில் சாதிக் பாஷா நன்றி உரையாற்றினார்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பு பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்னிபாத் சட்டத்தை ரத்து செய்ய கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஆறுமுகம். வட்டாரத் தலைவர்கள் திருமால், அயோத்தி, ரவிச்சந்திரன், மாது, தனஞ்செயன், நகரத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட துணை தலைவர்சேகர், சிங்காரப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகமத் பாஷா, முன்னாள் மாவட்டத் தலைவர் ஜேசு துரை, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரத்குமார்மா, நில இளைஞர் காங்கிரஸ் விக்னேஷ்தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மகேஷ்மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன் முத்துசிங்காரப்பேட்டை மணி, காமராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. தீர்த்தராமன் தலைமை வகித்தார். பொருளாளர் முத்து, ஏ.சி.சி. உறுப்பினர் சித்தையன், நரேந்திரன், மகளிர் அணி தலைவர் காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். இந்த ஆர்பாட்டத்தில் கனகராஜ், கணேசன், ஐ .என்.டி .யூ .சி .தங்கவேல், மோகன் குமார், வடிவேல், உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்டனர். இறுதியில் ஜெய் சங்கர் நன்றி கூறினார்.

Similar News