உள்ளூர் செய்திகள்
- மாவட்ட விளையாட்டு அரங்கில் 26-ந் தேதி நடைபெறுகிறது.
- ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி,
நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 26-ந் தேதி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், உதவி கலெக்டர் சதீஷ்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.