உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

செஞ்சி அருகே தி.மு.க வினரை கண்டித்து அ.தி.மு.க வினர் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-12-14 07:52 GMT   |   Update On 2022-12-14 07:52 GMT
  • இதற்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் நாட்டாமங்கலம் கூட்டுரோட்டில திரண்டனர்.
  • இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது.

விழுப்பபுரம்:

செஞ்சி அருகே உள்ள வல்லம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் நாட்டா மங்கலம் கூட்டு ரோட்டில திரண் டனர். அங்கு ஆர்ப்பாட்டத்திற்காக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் அ.தி.மு.க.பிரமுகர்கள் பேசிக்கொண்டு இருந்தனர் .அப்போது நாட்டாமங்கலம் கூட்டு ரோட்டிற்கு வந்த தி.மு.க.வினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டதற்கு இனிப்பு வழங்க முற்பட்டனர்.

அவர்கள் அ.தி.மு.க.வினர்ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த இடத்தில் பட்டாசு வெடித்ததுடன் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த இடத்தை கடந்து சென்று பஸ் நிலையத்தில் இனிப்பு வழங்கினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. நாங்கள் ஏற்கனவே அனுமதி பெற்று ஆர்ப்பா ட்டம் செய்யும் இடத்தில் தி.மு.க.வினருக்கு எப்படி அனுமதி வழங்கலாம் என போலீசாரை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News