அ.தி.மு.க பொதுக்குழுவை அவசரமாக கூட்ட வேண்டியதன் அவசியம் என்ன?- பெங்களூரு புகழேந்தி கேள்வி
- ஆகவே ஒரு மனிதனுக்கு மகுடம் சூட்டுவதாக கூறி, இதுபோன்று ஏமாற்று வேலைகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஓ.பன்னீர்செல்வம் நிச்சயமாக வெற்றி பெறுவார். நியாயம் அவர் பக்கம்தான் உள்ளது.
ஓசூர்,
அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி, ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது அதிமுகவில் பொதுக்குழுவை கூட்டியே ஆக வேண்டும் என்ற அவசரமும், அவசியமும் என்ன இருக்கிறது.? இவர்கள் கூட்டும் பொதுக்குழுவினால் மக்களுக்கு ஏதாவது பயன்கள் கிடைக்குமா? என்று தமிழக மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
ஆகவே ஒரு மனிதனுக்கு மகுடம் சூட்டுவதாக கூறி, இதுபோன்று ஏமாற்று வேலைகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பவர்கள், என்ன பேசுவது என்றே தெரியாமல், குறிப்பாக சி.வி. சண்முகம் போன்றவர்கள் குழம்பிய நிலையில் தற்போது நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்களும் குழப்பத்தை உருவாக்கும் விதமாக என்ன பேசுவது என்றே தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, எப்போது இதற்கான தீர்வு வந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் நிச்சயமாக வெற்றி பெறுவார். நியாயம் அவர் பக்கம்தான் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆரை பார்த்ததும் இல்லை, அதேபோல எம்ஜிஆருக்கு பழனிசாமியையும் தெரியாது.
இவர்களெல்லாம் சேர்ந்து கொண்டு முற்றிலுமாக குட்டையை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பொதுக்குழுவை சட்டத்திற்கு புறம்பாக நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் கூட்ட முடியாது.
இவ்வாறு பெங்களூரு புகழேந்தி கூறினார்.