உள்ளூர் செய்திகள்

கோவை  டி.ஐ.ஜி. விஜயகுமார் படத்துக்கு ஏ.டி.ஜி.பி. அருண் மலர்தூவி மரியாதை செலுத்திய காட்சி.

சேலத்தில் 4 மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஏ.டி.ஜி.பி அருண் திடீர் ஆலோசனை

Published On 2023-07-08 09:34 GMT   |   Update On 2023-07-08 09:34 GMT
  • சேலத்தில் 4 மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஏ.டி.ஜி.பி அருண் திடீர் ஆலோசனை நடத்தினார்.
  • போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.

சேலம்:

கோவையில் போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதைத்தொடர்ந்து இன்று காலை கோவை மாநகர மற்றும் சரகத்தில் உள்ள காவல் அதிகாரிகளுடன் தமிழக போலீஸ் ஏ.டி.ஜி.பி (சட்டம் ஒழுங்கு) அருண் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன்படி, இன்று மதியம் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் லாவண்யா, மற்றும் கவுதம் கோயல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சேலம் சிவகுமார், நாமக்கல் ராஜேஷ் கண்ணா, தர்மபுரி ஸ்டீபன் ஜேசுபாதம், கிருஷ்ணகிரி சரத்குமார் தாகூர் ஆகியோருடன் ஏ.டி.ஜி.பி அருண் ஆலோசனை நடத்தினார்.

கோவையில் டி.ஐ.ஜி விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போல் இனி நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு உயர் அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை தயக்கமின்றி தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் ஆலோசனை வழங்கி வழங்கினார்.

இதேபோல் உயர் அதிகாரிகளுக்கு கீழ் பணிபுரியும் அனைத்து தரப்பினரையும் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News