உள்ளூர் செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு வசதியாக கூடுதல் பஸ் வசதி - கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு

Published On 2023-02-20 12:05 IST   |   Update On 2023-02-20 12:05:00 IST
  • பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
  • சாமிகவுண்டன் பாளையத்துக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சாமிகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பல்லடம் அடுத்த சாமிகவுண்டன் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 650 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு காலை வரும் நேரத்திலும் மாலை பள்ளி முடிந்து வீடு செல்லும் நேரத்திலும் பஸ் வசதி இல்லாமல் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே பல்லடத்தில் இருந்து சாமிகவுண்டன் பாளையத்துக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News