உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வீடு கட்டித் தராமல் பொய்யான தகவலை பரப்பும் காண்டிராக்டர் மீது மானநஷ்ட வழக்கு - கொடைக்கானல் போலீசில் பாபி சிம்ஹா புகார்

Published On 2023-09-29 10:22 IST   |   Update On 2023-09-29 10:22:00 IST
  • நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டுவது சம்பந்தமாக ஒப்பந்ததாரர் ஜமீர் தரப்பினருக்கும் பாபி சிம்ஹா தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
  • பொய்யான தகவல்களை கூறினால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என புகார் அளித்துள்ளார்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் பேத்துப்பாறையில் நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டுவது சம்பந்தமாக ஒப்பந்ததாரர் ஜமீர் தரப்பினருக்கும் பாபி சிம்ஹா தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பாபி சிம்ஹா தரப்பு விளக்கத்தைக் கேட்டு கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் இருந்து ஜமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் பாபி சிம்ஹா தரப்பு வக்கீல்கள் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இது பற்றி பாபி சிம்ஹா தரப்பு வக்கீல் பாலு கூறியதாவது, போலீஸ் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

பாபி சிம்ஹா இங்கு இல்லாததால் நாங்கள் இதன் அடிப்படையில் எங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளோம். அவர்கள் எங்கள் மீது பொய் புகார் அளித்து உள்ளனர் என்று விளக்கம் அளித்து உள்ளோம். இந்த விஷயம் சம்பந்தமாக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஜமீர் தரப்பில் உள்ள உசைன் தொடர்ந்து பொது வெளியில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றார். மீண்டும் அவர் இதுபோன்று பொய்யான தகவல்களை கூறினால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News