வனப்பகுதி கசிவுநீர் குட்டையில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை
- கொல்லிமலை ஆகிய வனப் பகுதிகளில் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. தற்போது வெயிலின் தாக்கத்தால் வனத்தில் உள்ள குட்டைகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து விட்டன. இதனால் விலங்குகள் தண்ணீர் தேடி வனத்தை யொட்டியுள்ள கிராமங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளது.
- வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் வெயிலின் தாக்கம் தொடங்கி உள்ளதால் வனவிலங்குகளுக்கு வனகிராமங்களில் உள்ள கிணறுகளின் அருகே கட்டப்பட்டுள்ள தொட்டியில் கிணற்றில் இருந்து தண்ணீர் விடப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் உள்ள கசிவு நீர் குட்டையில் தண்ணீர் விடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட ஏற்காடு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு, மேட்டூர், ஆத்தூர், தம்மம்பட்டி, வாழப்பாடி, நாமக்கல், ராசிபுரம், கொல்லிமலை ஆகிய வனப் பகுதிகளில் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. தற்போது வெயிலின் தாக்கத்தால் வனத்தில் உள்ள குட்டைகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து விட்டன. இதனால் விலங்குகள் தண்ணீர் தேடி வனத்தை யொட்டியுள்ள கிராமங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளது.
இப்படி கிராமங்களில் தண்ணீர் குடிக்க வரும் மான்கள் கிணற்றில் தவறி விழுந்தும், நாய்கள் துரத்திச் சென்று கடிப்பதாலும் இறந்தும் விடுகிறது. இதனை தடுக்கும் விதமாக வனத்துறையினர் பல நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வாழப்பாடி வனத்தில் தண்ணீர் குடிக்க சென்ற காட்டு மாடுகள், கிணற்றில் விழுந்து உயிரிழந்தது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் வெயிலின் தாக்கம் தொடங்கி உள்ளதால் வனவிலங்குகளுக்கு வனகிராமங்களில் உள்ள கிணறுகளின் அருகே கட்டப்பட்டுள்ள தொட்டியில் கிணற்றில் இருந்து தண்ணீர் விடப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் உள்ள கசிவு நீர் குட்டையில் தண்ணீர் விடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக வனப்பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் திடீர் என தீ பிடித்து வருகிறது. இதனை வன ஊழியர்கள் அணைத்து வருகின்றனர். வனப் பகுதியில் தீ பிடிக்கும் பொருட்களை மக்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.