சிவாடி ஊராட்சியில் குடிநீர் குழாய்களை உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
- 200 மீட்டர் நீளத்திற்கு பைப் லைன்களை அமைத்து வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
- தொப்பூர் காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அறுமுகம் புகார் மனுவினை அளித்துள்ளார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் சிவாடி ஊராட்சி அமைந் துள்ளது. இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக ஆறுமுகம் உள்ளார். சிவாடி ஊராட்சியில் பொது குடிநீர் தேவையை தீர்க்கும் பொருட்டு 15-வது நிதி குழு மானியத்தின் மூலம் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு பைப் லைன்களை அமைத்து அங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று தனிநபர் ஒருவர் திடீரென புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அனைத்தையும் உடைத் துள்ளதாக கூறப்ப டுகிறது.
அப்பொழுது அதை தட்டி கேட்ட பொது மக்களையும் அந்த நபர் மிரட்டியதாகவும் கூறப்பட்ட நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தொப்பூர் காவல் நிலை யத்தில் புகார் மனு அளித் துள்ளார். அந்த மனுவில் இப்பகுதியில் முழுமையாக குடிநீர் தட்டுப்பட்டை நீக்கும் பொருட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு குடிநீர் சீராக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து பைப் லைன்களும் உடைக்கப் பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் குடிநீர் குழாயினை சேதப்படுத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொப்பூர் காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் புகார் மனுவினை அளித்துள்ளார்.