உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஆபரேசன் செய்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டரிடம் மனு

Published On 2023-01-23 10:15 GMT   |   Update On 2023-01-23 10:15 GMT
  • கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஆபரேசன் செய்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
  • கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

கடலூர்

பண்ருட்டி சிறுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. இவர்கள் தங்கள் குழந்தைகளுடன் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன் அன்றைய தினம் எனக்கு ஆபரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து 11 நாட்கள் கழித்து எனக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்ததால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மீண்டும் சேர்க்கப்பட்டேன்.

ஆனால் வலி நிற்காத காரணத்தினால் அக்டோபர் மாதம் 15 -ந் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டேன். இந்த நிலையில் தவறான ஆபரேசன் செய்ததாக டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தோம்.

இதனை தொடர்ந்து 2 முறை அரசு மருத்துவமனை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் இதற்கு இதனால் வரை பதில் மனு வழங்கவில்லை. ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பத்மாவதி அளித்த புகாரின் அடிப்படையில் அது சம்பந்தமாக விசாரணை நடத்தியது தொடர்பாக ஆவண கோப்புகளை உடனடியாக எடுத்து வந்து இதற்கான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

Tags:    

Similar News