ரேசன் அரிசி கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
சின்னசேலம் அருகே அதிரடி: லாரியில் கடத்திய 13.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்
- சின்னசேலம் அருகே லாரியில் கடத்திய 13.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- காட்டுமன்னார்குடி அருகே குமராட்சியை சேர்ந்த முத்துகுமாரசாமி கடத்தி வந்து உள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி, ரேசன் அரிசி கடத்தல் மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி டோல்கேட்டில் கீழ்குப்பம் போலீஸ் தனிப்பிரிவுசப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் இன்று அதிகாலை செம்பாக்குறிச்சி டோல்கேட் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர். அந்த லாரியில் 13.5 டன் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இந்த ரேசன் அரிசியினை காட்டுமன்னார்குடி அருகே குமராட்சியை சேர்ந்த முத்துகுமாரசாமி கடத்தி வந்து உள்ளார். பின்னர் அவரை கைது செய்து, அரிசி மற்றும் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்து விழுப்புரம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கடத்தப்பட்ட ரேசன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும், ராஜேந்திரனையும் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கூறுகையில் கள்ள க்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோத ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.