உள்ளூர் செய்திகள்

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-11-09 10:02 GMT   |   Update On 2022-11-09 10:02 GMT
  • பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
  • மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் விளையாடி மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.

சுவாமிமலை:

இரண்டாவது ஜூனியர், மாநில அளவிலான சூட்டிங்பால் சாம்பியன்ஷிப் 2022- க்கான போட்டி சேலத்தில் நடைபெற்றது. இப்போட்டியானது சேலம் ஷூட்டிங் பால் அசோசியேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போட்டியில் நாமக்கல், சேலம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு என தனித்தனி பிரிவுகளாகவும், 18 வயதிற்குட்பட்ட, மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் நடைபெற்றது.

போட்டியில் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த நவீன், தமிழ்,அப்துல் ரகுமான், ஈஸ்வர், மாதேஷ் ஆகிய 12-ம் வகுப்பு மாணவர்களும், லுக்மன்,நரேன், வெங்கடேஷ்,கைலாஷ் ஆகிய 11-ம் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் விளையாடி மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.

மேலும், சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கிராஸ் பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது.

போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு தனி பிரிவுகளாகவும், 8, 10, 12, 14, 16, 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் நடைபெற்றது.

போட்டியில் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் முகமது பிலால்,அப்துல் ரகுமான் ஆகியோர் சிறப்பாக விளையாடி மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.

மாணவர்கள் அனைவரும் மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடுமாறு பள்ளி நிறுவனர் கார்த்திகேயன், தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் அம்பிகாபதி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

மேலும், மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரை பாராட்டினர்.

கார்த்தி வித்யாலயா கல்வி குழுமம் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News