உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே இன்று காலை விபத்து : நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தம்பதி பலி

Published On 2022-06-24 10:04 GMT   |   Update On 2022-06-24 10:04 GMT
  • விழுப்புரம் அருகே இன்று காலை விபத்து நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தம்பதி பலி
  • தேசிய நெடுஞ்சாலை பகுதியில் விதிகளை மீறி லாரி மற்றும் கண்டெய்னர்களை நிறுத்தி வருகிறார்கள்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருக உள்ள பையூர்கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.(வயது 45). அவரது மனைவி அம்சவள்ளி. இவர்கள் 2 பேரும் புதுவை அருகே திருக்கனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் மேஸ்திரியாக பணியாற்றி வந்தனர்.

நேற்று இரவு செங்கல் சூளையில் தீ வைக்கும் பணி நடந்தது. இந்த பணி முடிந்ததும் இன்று அதிகாலை கணவன்- மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பையூர் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

விழுப்புரம் அருகே அயனம்பாளையம் பகுதியில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது சாலை ஒரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.இந்த விபத்தில் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி அம்சவள்ளி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ெஜயசங்கர் தலைமையிலான போலீசார் விரைந்தனர். பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கான முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சிலநாட்களாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் விதிகளை மீறி லாரி மற்றும் கண்டெய்னர்களை நிறுத்தி வருகிறார்கள். இதனால்தான் இது போன்ற உயிர்ப்பலி ஏற்படுகிறது என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே வாகனங்களை நிறுத்துவதை தடை செய்யவேண்டும் என்றுவலியுறுத்தப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News