உள்ளூர் செய்திகள்

பாலக்கோடு அருகே இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி சாவு

Published On 2022-08-27 15:21 IST   |   Update On 2022-08-27 15:21:00 IST
  • மோட்டார் சைக்கிளில் வந்த நபரும் பெரியசாமியும் நேருக்கு நேர் மோதியது.
  • இதில் பெரியசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தீத்தாரப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பெரியசாமி (வயது 32). இவர் நேற்று காலை பாலக்கோட்டிலிருந்து மாரண்டஅள்ளி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

காட்டு மாரியம்மன் கோவில் அருகே உள்ள திருப்பத்தில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த நபரும் பெரியசாமியும் நேருக்கு நேர் மோதியதில் பெரியசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரியசாமியின் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News