உள்ளூர் செய்திகள்
மெஞ்ஞானபுரம் அருகே விபத்து- நாய் குறுக்கே சாடியதால் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
- ஸ்டீபன் ராஜ் சவாரிக்காக பரமன்குறிச்சியில் இருந்து உடன்குடிக்கு சென்றார்.
- திருச்செந்தூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஸ்டீபன் ராஜை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
திருச்செந்தூர்:
உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன் விளையை ேசர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( வயது 40). இவர் பரமன்குறிச்சியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
நேற்று மாலை இவர் சவாரிக்காக பரமன்குறிச்சியில் இருந்து உடன்குடிக்கு சென்றார். தண்டுபத்து பகுதியில் சென்றபோது நாய் ஒன்று குறுக்கே சாடியது. இதனால் ஸ்டீபன் ராஜ் திடீரென பிரேக் போட்டதும் எதிர் பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஸ்டீபன் ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருச்செந்தூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.