உள்ளூர் செய்திகள்

சிதம்பரத்தில் இன்று காலை விபத்து தனியார் சொகுசுபஸ் மோதி என்ஜினீயர் பலி

Update: 2022-09-27 07:21 GMT
  • இன்று காலை சொந்த வேலைக்காக மோட்டார் சைக்கிளில் மேலரதவீதிக்கு வந்தார்.
  • கண்இமைக்கும் நேரத்தில் இந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காரீயபெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வர் ராகுல் (வயது 31). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் இன்று காலை சொந்த வேலைக்காக மோட்டார் சைக்கிளில் மேலரதவீதிக்கு வந்தார். அப்போது அந்த வழி யாக சிதம்பரம் நோக்கி தனியார் சொகுசுபஸ் வந்தது. இந்த பஸ் வடக்கு ரதவீதியாகத்தான் வர வேண்டும் ஆனால் ஒருவழி பாதை உத்தரவை மீறி வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் இந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் என்ஜினீயர் ராகுல் தூக்கி வீசப்பட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் தூக்கிக் கொண்டு சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தி ரி யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News