உள்ளூர் செய்திகள்
விபத்தில் பலியான பெரியசாமி.
புவனகிரியில் இன்று காலை விபத்து: சுற்றுலா பஸ் மோதி என்.எல்.சி. ஊழியர் பலி
- டீ குடிப்பதற்கு அந்த பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார்.
- தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள விருத்தாசலம் சாலை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர். இவர் இன்று அதிகாலை டீகுடிப்பதற்கு அந்த பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக ந்த சுற்றுலா பஸ் பெரியசாமி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்தார்.விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.