ஆங்கில புத்தாண்டை ஒட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 2 டன் பூக்களால் அபிஷேகம்
- நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லாலான 18 அடி உயர ஆஞ்சநேயர் சாந்த சொரூபியாக நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
- இந்தநிலையில் ஆங்கில புத்தாண்டான இன்று காலை முதலே நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
நாமக்கல்:
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லாலான 18 அடி உயர ஆஞ்சநேயர் சாந்த சொரூபியாக நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இத்தகைய புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து ஆஞ்ச நேயரை தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்தநிலையில் ஆங்கில புத்தாண்டான இன்று காலை முதலே நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
குறிப்பாக நாமக்கல்
மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்க ளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அதிகாலை முதலே வந்தனர்.
அவர்கள் நீண்ட வரிசை யில் பல மணி நேரம் காத்து நின்று ஆஞ்ச நேயரை தரிசனம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பால், தயிர், மஞ்சள் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 2 டன் பூக்களால் மேள தாளங்கள் முழங்க சிறப்பு அபிஷேகமும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு செய்யப்பட்டது .
இதையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வதால் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.