உள்ளூர் செய்திகள்
கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்
ஆடி கிருத்திகை.. திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
- கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படவேணடும்.
- விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு 26ம் தேதி பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.
திருத்தணியில் அமைந்துள்ள திருமுருகப்பெருமானின் ஐந்தாம்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 9ம் தேதி (புதன்கிழமை) நடைபெறவிருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு 9ம் தேதி செயல்படவேணடும்.
இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு 26ம் தேதி (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.