உள்ளூர் செய்திகள்
குதிரை வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடந்தது.
வாய்மேடு வேம்படி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
- தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- முக்கிய நிகழ்வான மஞ்சள் விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வாய்மேடு சிந்தாமணிக்காடு பகுதியில் உள்ள வேம்படி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான மஞ்சள் விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது.
முன்னதாக சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.