உள்ளூர் செய்திகள்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு சிறப்பு முகாம்

Published On 2023-03-11 15:29 IST   |   Update On 2023-03-11 15:29:00 IST
  • இந்த பணி இம்மாவட்டத்தில் தற்போது 76 சதவீதம் முடிவடைந்துள்ளது.
  • வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு இன்றும் (சனிக்கிழமை), வருகிற 18-ந் தேதியும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்ட ருமான தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த பணி இம்மாவட்டத்தில் தற்போது 76 சதவீதம் முடிவடைந்துள்ளது. இப்பணியினை துரிதப்படுத்தும் நோக்கில் இன்றும் (சனிக்கிழமை), வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தேதிகளில் அனைத்து வாக்குசாவடி நிலை அலுவலர்களும் வீடுவீடாக சென்ற களப்பணி மேற்கொண்டு வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை பெற்று 6பி படிவத்தில் உள்ளீடு செய்யும் பணி மேற்கொள்வார்கள்.

அலுவலர்கள் இப்பணி தொடர்பாக படிவம் 6பி சேகரிக்கும் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறும், வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் கீழ்காணும் இணைய வழிகள் மூலம் தங்கள் வீடுகளிலிருந்தே இணைய வழியில் வாக்காளர்களே நேரடியாக இணைக்கலாம்.

மேலும், இணைக்க தவறியவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அல்லது படிவம் 6பி-ஐ சமர்ப்பித்து வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் பதிவு செய்துகொள்ளலாம்.

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்கள் பெறலாம். மேற்கண்ட தேர்தல் ஆணையத்தின் சேவைகளை தவறாமல் பயன்படுத்திக ்கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News