உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அதிகாரிகள்  கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்கம்

Published On 2022-12-01 15:31 IST   |   Update On 2022-12-01 15:31:00 IST
  • மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தமிழகம் முழுவதும் கடந்த 28-ந் தேதி தொடங்கியது.
  • மின்பொறியாளர் குருசாமி உத்தரவின்படி பிரசார வாகனம் மூலம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி உபமின் நிலையத்தில் இன்று தொடங்கப்பட்டது.

நெல்லை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நெல்லை வட்டம், நெல்லை நகர்புற கோட்டத்தின் சார்பாக மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தமிழகம் முழுவதும் கடந்த 28-ந் தேதி தொடங்கியது.

தொடர்ந்து 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இப்பணியை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி உத்தரவின்படி பிரசார வாகனம் மூலம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி உபமின் நிலையத்தில் இன்று தொடங்கப்பட்டது. அதனை நெல்லை நகர்புற கோட்டத்தின் செயற்பொறியாளர் முத்துக்குட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் எட்வர்ட்பொன்னுசாமி, உதவி செயற்பொறியாளர் சங்கர், பாளை உபகோட்ட உதவி மின்பொறியாளர்கள் வீரபுத்திரகுமார், செல்வம், சங்கரநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பிரசார வாகனம் சமாதானபுரம், சாந்திநகர், வண்ணார்பேட்டை, வி.எம்.சத்திரம் வழியாக சென்றது.

Tags:    

Similar News