உள்ளூர் செய்திகள்

பி.எம். கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற ஆதார் விபரங்களை பதிவேற்ற வேண்டும் - ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்துறை வேண்டுகோள்

Published On 2022-08-09 08:52 GMT   |   Update On 2022-08-09 08:52 GMT
  • விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 ஊக்க தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
  • பி.எம். கிசான் இணையத்தில் இ.கே.ஒய்.சி. மூலம் தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும்.

தென்திருப்பேரை:

பி. எம். கிசான் திட்டத்தில் ஊக்கத் தொகையாக ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் பெறும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் விபரங்களை இணையத்தில் சரி பார்த்திட ஆழ்வார் திருநகரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லிராணி கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 ஊக்க தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பி.எம். கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியை பொறுத்து 11 தவணை வரை தொகைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தொடர்ந்து தவணைத் தொகை பெறுவதற்கு தங்கள் ஆதார் விபரங்களை பி.எம். கிசான் இணையத்தில் இ.கே.ஒய்.சி. மூலம் தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். தாங்கள் அருகாமையில் உள்ள பொது இ- சேவை மையங்களில் அல்லது அஞ்சல் அலுவலகத்தை அணுகி சரி பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் தங்களது ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி. எம். கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி. எண் மூலம் சரிபார்ப்பு செய்து கொண்டு விவசாயிகள் உடனடியாக தவணைகள் பெறுவதை உறுதி செய்யவும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News