அசாம் மாநிலத்திலிருந்து பள்ளி மாணவியை கடத்தி வந்து திருமணம் செய்த வாலிபரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
மாணவியை கடத்தி வந்து ஓசூரில் குடும்பம் நடத்திய வாலிபர் கைது
- பள்ளி மாணவியை, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூருக்கு கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
- மாணவியை மீட்டு அவரை கடத்தி வந்ததாக வாலிபர் அப்துல் வாகாவை கைது செய்தனர்.
ஓசூர்,
அசாம் மாநிலம் காம்ருப் மாவட்டம் பகுருதியா பகுதியை சேர்ந்த அப்துல் வாகா (வயது 23) என்ற வாலிபர், அதே பகுதியை சேர்ந்த 10- ம் வகுப்பு படித்து வந்த 14 வயது பள்ளி மாணவியை, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூருக்கு கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஓசூர் சிப்காட் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
அப்துல் வாகா, ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
பள்ளி மாணவி கடத்தல் குறித்து அவரது பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், அசாம் மாநிலம் நாகர் பெரா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்துல் வாகாவின் செல்போன் எண்ணை கண்காணித்து அவர் ஓசூர் பகுதியில் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் சிசிர் குமார் பாசுபதி தலைமையிலான.பின்னர், போலீசார் அந்த மாணவியை மீட்டு அவரை கடத்தி வந்ததாக வாலிபர் அப்துல் வாகாவை கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து இருவருக்கும் ஓசூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், அசாம் மாநிலத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.