உள்ளூர் செய்திகள்
சுரண்டை அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்-போலீசார் விசாரணை
- முத்து இன்று காலை வாடியூர் பகுதியில் உள்ள ஒரு தொழுவத்தில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
- முத்து தற்கொலை செய்த கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள வரகுணராமபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் முத்து ( வயது 19). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை வாடியூர் பகுதியில் உள்ள ஒரு தொழுவத்தில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் தற்கொலை செய்த கொண்டாரா? அல்லது யாரேனும் அடித்து தொங்க விட்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.