கோப்பு படம்.
போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை
- ஏலத் தொட்டத் தொழிலாளி அடிக்கடி கஞ்சா விற்பனையில் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
- இதனால் அக்கம் பக்கத்தில் தனக்குத் தலைகுனிவாக உள்ளது என கூறி குமுளி போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.
கூடலூர்:
தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி வெப்பக்க ண்டத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி சுரேஷ் (வயது 42). ஏலத் தொட்டத் தொழிலாளி. இவர் அடிக்கடி கஞ்சா விற்பனை யில் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார். சம்பவத்தன்று குமுளி இன்ஸ்பெக்டர் சோபின் ஆண்டனி தலைமையில் போலீசார் கஞ்சா விற்பனை தொடர்பாக அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் கஞ்சா எதுவும் சிக்கவில்லை. இதனால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் முனியாண்டி சுரேஷ் எந்த காரணத்துக்காக போலீசார் தன் வீட்டில் சோதனை நடத்துகிறார்கள்? இதனால் அக்கம் பக்கத்தில் தனக்குத் தலைகுனிவாக உள்ளது என கூறி குமுளி போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.
மேலும் போலீஸ் நிலைய வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
முனியாண்டி சுரேஷ் மீது கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.