உள்ளூர் செய்திகள்

ரெயில்வே கேட்டில் லாரி மோதி விபத்து

Published On 2022-12-03 10:05 GMT   |   Update On 2022-12-03 10:05 GMT
  • ரெயில் நிலையங்களில் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
  • விசாரணையில் பொதுப்பணித்துறைக்கு டீசல் பிடித்து செல்லும் லாரி என்பது தெரியவந்தது.

சுவாமிமலை:

திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை- தரங்கம்பாடி சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் லாரி மோதியதால் ஓ.எச்.டி லைன் அறுந்து விழுந்து கேட் சிக்னல் பழுதானது.

இதனை சீரமைக்கும் பணியை ரெயில்வே பணியாளர்கள் இரவில் உடனடியாக மேற்கொண்டனர். சிக்னல் சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. 

இதனால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், திருப்பதி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் சுமார் 3 மணி நேரம் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பொதுப்பணித்துறைக்கு டீசல் பிடித்து செல்லும் லாரி என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து காலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து ஆடுதுறை கேட்பகுதியை கடக்க ஏதுவாக மாற்று ஏற்பாடாக ரெயில்களில் டீசல் என்ஜின் பயன்படுத்தி இயக்கப்பட்டது.

Tags:    

Similar News