கூடலூர் அருகே ஆட்ைட அடித்து கொன்ற புலி
- புலியை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புலி அங்கிருந்த ஆடு ஒன்றை அடித்து கொன்று, வாயில் கவ்வி இழுத்து சென்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் உள்ளது கள்ளஞ்சேரி கிராமம்.
இந்த கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இதனால் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். ேநற்று வழக்கம் போல் ஆடுகளை அருகே உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
மாலையில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது திடீரென புலி ஒன்று அங்கு வந்தது. புலி அங்கிருந்த ஆடு ஒன்றை அடித்து கொன்று, வாயில் கவ்வி இழுத்து சென்றது.இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டனர். சிறிது தூரம் சென்றதும் ஆட்டை அங்கு போட்டு விட்டு புலி வனத்திற்குள் சென்று விட்டது.இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் இறந்து கிடந்த ஆட்டை பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
புலி நடமாட்டம் இருப்பதால் யாரும் தனியாக நடமாட வேண்டாம் எனவும் வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
புலி நடமாட்டத்தால் அச்சமாக உள்ளோம். ஏற்கனவே கடந்த வாரம் தெப்பக்காட்டை சேர்ந்த ஒருவரை புலி தாக்கி அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே வனத்துறையினர் புலியை கண்காணித்து, அதனை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்னர்.