உள்ளூர் செய்திகள்
காரில் 850 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
- திருப்பத்தூர் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலை செங்கல்மேடு அருகே அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர்.
- அந்த வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 17 மூட்டைகளில் சுமார் 850 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.
தருமபுரி, ஜூலை.8-
தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் தலைமை காவலர்கள் சக்திவேல் மற்றும் கோவிந்தன் ஆகியோர் திருப்பத்தூர் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலை செங்கல்மேடு அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 17 மூட்டைகளில் சுமார் 850 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அன்பு (வயது38) என தெரியவந்தது.
பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். வாகனம் மற்றும் ரேசன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.