உள்ளூர் செய்திகள்
- சின்னாறு அருகே வரும்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியது.
- இதில் படுகாயம் அடைந்த பிமல்கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
கிருஷ்ணகிரி,
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவரது மகன் பிமல் கிருஷ்ணா (வயது25). இவர் இருசக்கர வாகனத்தில் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சின்னாறு அருகே வரும்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த பிமல்கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.