உள்ளூர் செய்திகள்

சமுத்திரம் ஏரியில் மேம்பாட்டு பணிகள் தொடர்பான வரைபடத்தை சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் பார்வையிட்டனர்.

தஞ்சை சமுத்திரம் ஏரிக்கரையில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு

Published On 2023-07-12 10:07 GMT   |   Update On 2023-07-12 10:07 GMT
  • நூற்றுக்கு நூறு பணிகளை நிறைவேற்ற வேண்டும்.
  • ஆய்வில் மொத்தம் 121 மனுக்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழக அரசின் தலைமை கொறடாவும், சட்டப்பேரவை மனுக்கள் குழுத் தலைவருமான கோவி. செழியன் தலைமையிலான இக்குழுவினர் தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள காடவராயன்குளம், வடிகால் வாய்க்கால், சமுத்திரம் ஏரியை ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட பொது நலன் குறித்த மனுக்கள் மீது சட்டப்பேரவை மனுக்கள் குழு 9 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்பகலில் மனுதாரர்கள், அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு நடை பெறவுள்ளது.

இந்த ஆய்வில் மொத்தம் 121 மனுக்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அனைத்து மனுதா ரர்களையும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வரவழைத்து, அனைத்து துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தவுள்ளோம்.

நூற்றுக்கு நூறு பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இக்கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

சாலை வசதி, குளக்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தூர் வாருதல் உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கைகள் அதிகமாக உள்ளன.சமுத்திரம் ஏரி கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதையுடன் கூடிய மேம்பாட்டு பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது.

இது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், சட்டப்பேரவை மனுக்கள் குழுச் செயலர் சீனிவாசன், டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News