உள்ளூர் செய்திகள்
மப்டியில் வீட்டுக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி செய்ய முயற்சி
- சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேலின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையர்கள் வழிப்பறி செய்ய முயன்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பழனிவேல்.இவர் பணியை முடித்துவிட்டு ரத்தனகிரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
நந்தியாலம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேலின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையர்கள் வழிப்பறி செய்ய முயன்றனர்.
அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தனது பைக்கில் உள்ள சைரனை ஆன் செய்ததால், அதன் சத்தத்தை கேட்ட கொள்ளையர்கள் தப்பியோடினர். இது குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.