உள்ளூர் செய்திகள்
வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
- இந்தியன் வங்கி மற்றும் அஞ்சல்துறை அலுவலர்கள் கலந்து க்கொண்டு, புதியதாக வங்கி கணக்கு தொடங்கும் பணி மட்டும் நடைபெற்றது.
- ஏற்கெனவே கணக்கு வைத்துள்ள மாணவர்களின் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கும் பணி நடை பெறாததால் நீண்ட நேரம் காத்து கிடந்து ஏமாற்ற த்துடன் மாணவர்கள் திரும்பி சென்றனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவின் பேரில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற, வங்கி புத்தகத்துடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டனர்.இதனைத் தொடர்ந்து ஊத்தங்கரை சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குவிந்தனர்.
ஊத்தங்கரை இந்தியன் வங்கி மற்றும் அஞ்சல்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டு, புதியதாக வங்கி கணக்கு தொடங்கும் பணி மட்டும் நடைபெற்றது.ஏற்கெனவே கணக்கு வைத்துள்ள மாணவர்களின் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கும் பணி நடை பெறாததால் நீண்ட நேரம் காத்து கிடந்து ஏமாற்றத்துடன் மாணவர்கள் திரும்பி சென்றனர்.