உள்ளூர் செய்திகள்

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை படத்தில் காணலாம்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இலவச வீட்டுமனை பட்டா கோரி முற்றுகை

Published On 2022-08-03 13:49 IST   |   Update On 2022-08-03 13:49:00 IST
  • வீடில்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
  • விண்ணப்பித்தவர்களில் தகுதியான வர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க கோட்டாச்சியர் மகாலெட்சுமி உத்தரவிட்டார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்த லிங்கம்பட்டியில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

லிங்கம்பட்டி பகுதியில் வசிக்கும் வீடில்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி வருவாய் துறையிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, துணை செயலாளர் சேகர் உள்பட அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் கோட்டாட்சியர் அலு வலகம் முன் திரண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர், கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் அளித்தனர்.

உடனடியாக தாசில்தார் சுசிலாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியான வர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் உத்தரவிட்டார். தங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த கோட்டாச்சியர் மகாலெட்சுமியின் செயலை கண்டு வியந்த பெண்கள் அவருக்கு நன்றி தெரிவித்துச் சென்றனர்.

Tags:    

Similar News