உள்ளூர் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் பிரெஞ்சு பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ.15 ஆயிரம் கொள்ளை.

Published On 2023-02-08 15:06 IST   |   Update On 2023-02-08 15:06:00 IST
  • புதுச்சேரி பிரெஞ்சு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோட்டக்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு தினமும் சென்று வருவது வழக்கம்.
  • உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது .

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் திவான் கந்தப்பநகரில் வசித்து வருபவர் சிலியா (வயது 47). பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர் புதுச்சேரி பிரெஞ்சு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோட்டக்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு தினமும் சென்று வருவது வழக்கம்.   இதன்படி நேற்று காலை 8 மணிக்கு வீட்டை பூட்டிக் கொண்டு புதுச்சேரி பிரெஞ்சு பள்ளிக்கு சென்றார். மாலை 5 மணியளவில் வீடு திரும்பினார். பூட்டை திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பிரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.  வீட்டினுள் சென்று பார்த்தபோது கதவுகள் ஏதும் உடைக்கப்படவில்லை. வீட்டின் பின்புறம் இருந்த பைப் வழியாக 2-வது மாடிக்கு ஏறி படிகட்டு வழியாக வீட்டிற்கு வந்து திருடிச் சென்றிருக்கலாம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தனி நபரா? அல்லது கொள்ளைக் கும்பலா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News